முல்லைத்தீவில் இராணுவத்தினரின் படப்பிடிப்பால் போக்குவரத்து தடை

Report Print Vanniyan in சமூகம்

முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தில் இராணுவத்தின் வீர செயல்களை பறைசாற்றும் விதமான படப்பிடிப்பு ஒன்று இராணுவத்தினரால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பகுதியில் பொது போக்குவரத்தில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது.

பாலத்தில் எதிர் முனையில் கமராக்களை பொருத்தி மறுமுனையிலிருந்து கனரக யுத்த வாகனங்கள் , ஆயுதம் தாங்கிய படையினரின் அணிகளை நகர்த்தி பாலத்தில் வைத்து படப்பிடிப்பு இடம்பெற்று வந்தமையால் இரு மருங்கிலும் படையினரால் வீதி தடைகள் போடப்பட்டு படப்பிடிப்பு இடம்பெற்றுள்ளது.

இதனால் முல்லைத்தீவு,பரந்தன் வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சிரமங்களுக்கு உள்ளானதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் படையினரின் இவ்வாறான நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அச்ச உணர்வினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.