பிரஜைகள் என்ற கடமையை நிறைவேற்றுங்கள் - பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

Report Print Steephen Steephen in சமூகம்

எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல் என்பதால், மக்கள் என்ற வகையில் தேர்தலில் பங்களிப்பது மக்களுக்கும் தனக்கு உள்ள பொறுப்பு என கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

போராயர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.

மக்கள் பிரஜைகள் என்ற முறையில் தமது கடமையை நிறைவேற்ற வேண்டும் என பேராயர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முடிந்த கதியில் வாக்குச் சாவடிகளுக்கு சென்று, தேர்தல் ஆணைக்குழு, பாதுகாப்பு தரப்பு மற்றும் சுகாதார துறையினர் வழங்கியுள்ள பரிந்துரைகளை பின்பற்றி மக்கள் தமது விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.

இந்த முறையின் ஊடாக தகுதியானவர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்ப வேண்டியது மக்களின் கடமை. நாட்டின் எதிர்காலத்திற்கு பொருத்தமான தீர்மானத்தை எடுக்கவும் நாட்டை முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்லவும் மக்கள் எடுக்கும் தீர்மானம் முக்கியமானதாக அமையும்.

இதனை தவறவிட வேண்டாம். இதனை தவறவிடுவதால், எமது நாட்டுக்கு ஏதேனும் பிரச்சினைகள் நேர்ந்தால் அதில் நீங்களும் பங்காளிகளாக இருப்பீர்கள் என்பதால், உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள் என பேராயர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.