இலங்கையின் கொரோனா நிலவரம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!

Report Print Murali Murali in சமூகம்

சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2828 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 300 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் மூவர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்படி, நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2517 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.