வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கான விசேட அறிவிப்பு!

Report Print Murali Murali in சமூகம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெறாத வாக்காளர்கள், அதைப் பெற்றும்கொள்ளும் வகையில், நாளை மற்றும் நாளை மறுநாள் தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்கள் பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று, அடையாளத்தை உறுதிப்படுத்தவும் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை மறுதினம் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக சொந்த இடங்களுக்கு செல்வதற்கு விடுமுறை வழங்காத நிறுவனம் மற்றும் வர்த்தக நிலையங்களின் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரையில் விடுமுறை கிடைக்கப் பெறாத ஊழியர்கள் தேர்தல் ஆணைக்குழுவிலோ அல்லது தொழிற் துறை ஆணைக்குழுவிலே விரைவாக முறைப்பாடு செய்யுங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.