ஹலால் சான்றிதழ் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் வெளியான தகவல்

Report Print Steephen Steephen in சமூகம்

ஹலால் சான்றிதழ்களை வழங்குவதன் மூலம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை மாதாந்தம் 15 இலட்சம் ரூபாய் வருமானத்தை பெற்று வருவதாக ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன அண்மையில் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

4 ஆயிரத்து 500 உணவு பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் ஜம்மியத்துல உலமா சபையில் வருடாந்தம் 213 நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ்களை பெறுவதற்காக பதிவு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.