இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு..!

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 2834 ஆக உயர்ந்துள்ளது. சவூதி அரேபியாவில் இருந்து வந்த 6 பேர் இன்று தொற்றாளிகளாக இனங்காணப்பட்டனர்.

இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தநிலையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டனர். இதனிடையே தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2524 ஆக உயர்ந்துள்ளது.

299 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.