முல்லைத்தீவில் இராணுவ சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன!

Report Print Mohan Mohan in சமூகம்

நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முல்லைத்தீவில் இராணுவத்தினர் அமைத்திருந்த வீதி சோதனை சாவடிகளை அகற்றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு -பரந்தன் பிரதான வீதி மற்றும் மாங்குளம் நெடுங்கேணி பிரதான வீதிகளில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட சோதனை சாவடிகளே இவ்வாறு அகற்றப்பட்டுள்ளன.

மேலும் பிரதான வீதிகளின் அமைத்திருந்த காவலரண்களில் இருந்தும் இராணுவத்தினரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.