இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை இன்று மேலும் அதிகரிப்பு!

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 2838ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து வந்த ஒருவர், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து வந்த இரண்டு பேர் மற்றும் சேனபுர புனர்வாழ்வு நிலையத்தின் தொற்றாளியுடன் தொடர்புடைய ஒருவர் ஆகியோரே இன்று தொற்றாளிகளாக இனங்காணப்பட்டனர்.

இதில் 290 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

13பேர் இன்று தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 2597ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை,இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான (2020) உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் மாலை ஐந்து மணிக்கு நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் பொது தேர்தலில் வாக்களிக்க 1 கோடி 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த போதும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு இம்முறை வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.