பலத்த பாதுகாப்பிற்கும் மத்தியில் தீவிர கண்காணிப்பிலுள்ள முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி

Report Print Gokulan Gokulan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வாக்கெண்ணும் நிலையமான, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி பாதுகாப்புத் தரப்பினரின் பலத்த பாதுகாப்பில் காணப்படுகின்றது.

குறிப்பாக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் தீவிர கண்காணிப்பில் வித்தியானந்தா கல்லூரி காணப்படுகின்றது.

அந்தவகையில்,வித்தியானந்தா கல்லூரி வளாகத்தினைச் சுற்றிலும் ஆயுதம் தாங்கிய விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன், கல்லூரியினுடைய வாயில்கள் மூடப்பட்டு, கல்லூரி வளவினுள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்,அறிவித்தல் பலகை வைக்கப்பட்டு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை,கல்லூரியினுடைய வெளிப்புறத்தில் நான்கு மூலைகளிலும், தற்காலிகமாக தகரப்பந்தல்கள் இடப்பட்டு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைவிட முல்லைத்தீவு,மாங்குளம் பிரதான வீதியில், வித்தியானந்தா கல்லூரியின் அருகாமையில், இரு இடங்களில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வித்தியானந்தா கல்லூரியின் பின்புற வீதி முற்றாக மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.