தனிமைப்படுத்தலில் இருந்த லங்காபுர பிரதேச சபையின் தலைவர் வாக்களித்துள்ளார்!

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தலில் இருந்தபோதும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களையும் மீறி பொலன்னறுவை லங்காபுர பிரதேசசபையின் தலைவர் நேற்று தேர்தலில் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரும் அவருடைய குடும்பத்தினரும் வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று வாக்களித்துள்ளனர்.

எனினும் அவர்களை வாக்களிக்க அனுமதிக்கமுடியாது என்று சுகாதார அதிகாரிகள் தடுத்தபோதும் அவர்கள் தமது வாக்குகளை செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து லங்காபுர பிரதேசசபையின் தலைவரும் அவருடைய குடும்பத்தினரும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

கொரோனா பரவல் காரணமாக லங்காபுர செயலகம்,பிரதேசசபை மற்றும் அரச வங்கி என்பன அண்மையில் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.