சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இனிமேல் நவீன துப்பாக்கிகள்

Report Print Rakesh in சமூகம்

உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நவீன துப்பாக்கிகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் பிரகாரம் மில்லி மீற்றர் - 09 ரக கைத்துப்பாக்கிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை , மகசின் , கொழும்பு தடுப்புக்காவல் , நீர்கொழும்பு , பூஸா மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ ஆகிய சிறைச்சாலைகளின் அதிகாரிகள் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு இந்தத் துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு துப்பாக்கிகளைப் பெற்றுக்கொள்ளும் அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.