இலங்கையில் கொரோனா நிலவரம்! வெளியாகியுள்ள அறிவிப்பு

Report Print Murali Murali in சமூகம்

நாட்டில் இன்றையதினம் கொரோனா தொற்றாளர்கள் 23 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இவர்களில், 11 பேர் கந்தகாடு கிசிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்திலிருந்தும், 5 பேர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையிலிருந்தும் 4 பேர் காத்தான்குடி வைத்தியசாலையிலிருந்தும், 2 பேர் வெலிகந்த வைத்தியசாலையிலிருந்தும், ஒருவர் கொழும்பு கிழக்கு வைத்தியசாலையிலிருந்தும் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,564 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 2,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 264 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன் 38 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.