ருவன்வெல பகுதியில் புதையல் தோண்டிய எட்டுப்பேர் கைது

Report Print Banu in சமூகம்
30Shares

கேகாலை, ருவன்வெல பகுதியில் உள்ள இபிலியகம பகுதியில் புதையல் தோண்டிய எட்டுப்பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருவன்வெல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், பூஜை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டி, கனேமுல்ல, அவிசாவளை மற்றும் ருவன்வெல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.