விபத்தினை கட்டுப்படுத்த வவுனியா பொலிஸாரின் விசேட நடவடிக்கை

Report Print Theesan in சமூகம்
122Shares

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசாரினால் வீதி ஒழுங்குகள் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகள் இன்று காட்சிப்படுத்தப்பட்டது.

வவுனியாவில் அண்மைய நாட்களில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வீதி ஒழுங்குகள் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள கண்டி வீதியில், மூன்றிற்கும் மேற்பட்ட இடங்களில் இவை காட்சிப்படுத்தபட்டிருந்தது.

வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றிருந்த நிகழ்வில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.