மேலதிக வகுப்புக்கு சென்ற 11 மாணவர்களுக்கு நேர்ந்த கதி! ஒருவர் உயிரிழப்பு

Report Print Kanmani in சமூகம்

பொலன்னறுவை - அரலகங்வில பகுதியில், போகாஸ் சந்திக்கு அருகே இடம்பெற்ற விபத்தில், மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெயத்தகண்டியிலிருந்து அரலகங்வில நோக்கி வேகமாக பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று மேலதிக வகுப்புக்காக வீதியில் பயணித்த மாணவர்கள் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 14 முதல் 16 வயது வரையிலான 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் 4 பேர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஏனைய 07 பேர் அரலகங்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த 16 வயது மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ரத்மல்தென்ன பிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.