தென்னிலங்கை பகுதியில் பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 20 பேர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

தென்னிலங்கை - ஹொரன, மில்லேனிய பகுதியில் 5 பெண்கள் உட்பட 20 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து ஒன்றின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விருந்தின் போது ஹெரோயின் உட்பட்டபோதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இவ்வாறான பல விருந்துகள் பொலிஸாரினால் பல இடங்களில் முற்றுகையிடப்பட்டன.

இதேவேளை அண்மையிலும் மஹரகம பகுதியில் பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட சட்டவிரோத உந்துருளி பந்தயமொன்று பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.