மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 447 பேர் நாடு திரும்பியுள்ளனர்

Report Print Rakesh in சமூகம்

கொரோனா வைரஸ் பரவலையடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 447 பேர் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 420 பேரும், கட்டாரிலிருந்து 27 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

இதனைத் தவிர, தூதரக அதிகாரிகள் 16 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.இதேவேளை, சீனாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 112 பேர் நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை,இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2841 ஆக அதிகரித்துள்ளது.