பிரதமர் மஹிந்த படைத்துள்ள புதிய உலக சாதனை

Report Print Jeslin Jeslin in சமூகம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச புதிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளதாக பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளில் மூன்று முறை நியமிக்கப்பட்ட ஒரே ஒரு பிரதமர் என்ற உலக சாதனையை மஹிந்த ராஜபக்ச படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.