ஹம்பாந்தோட்டையில் சீனாவின் பெயர் வடிவிலுள்ள கட்டங்களை காண்பித்த கூகுள் வரைபடம்!

Report Print Banu in சமூகம்

ஹம்பாந்தோட்டைப்பகுதியில் "CHINA SW” என்ற உச்சரிப்பில் சீனாவை குறிக்கும் வகையிலான ஆங்கில எழுத்துக்களில் உருவக்கப்பட்ட பல கட்டடங்களை கூகுள் வரைபடம் வெளியிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை , சூரியவெவ பகுதியிலுள்ள கட்டடத்தொகுதியொன்றிலே இவ்வாறு சீனாவை பிரதிபலிக்கும் வகையிலான எழுத்துக்கள் காணப்படுகின்றன.

இந்த கட்டிடங்கள் ஹம்பாந்தோட்டை மிர்ரிஜவிலா- சூரியவெவ வீதியில் அமைந்துள்ள சீனாவின் எஸ்.எல்.கே துறைமுக சேவைக்கு சொந்தமானவை எனதெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட சீனாவின் பெயரை பிரதிபலிக்கும் கட்டடத்தொகுதியின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.