கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை இன்றிரவு வரை 2870ஆக உயர்ந்துள்ளது.

இன்று இறுதியாக ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து வந்த மூவர் தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.

முன்னதாக சேனபுர புனர்வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 23 பேர் தொற்றாளிகளாக இனங்காணப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் இன்று மாத்திரம் 26பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.

இதேவேளை 266பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.இன்று 14 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பிய நிலையில் தொற்றில் இருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்கை 2593ஆக உயர்ந்துள்ளது.

முதலாம் இணைப்பு

இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை இன்று இரவு வரை 2869ஆக உயர்ந்திருந்தது.

இன்று இறுதியாக ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து வந்த இருவர் தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.

முன்னதாக சேனபுர புனர்வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 23பேர் தொற்றாளிகளாக இனங்காணப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் இன்று மாத்திரம் 25 பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர். இதேவேளை 265 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்று 14 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடுதிரும்பிய நிலையில், தொற்றில் இருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்கை 2593 ஆக உயர்ந்துள்ளது.