அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர டி சில்வாவின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்காக ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துரைத்த அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளன செயலாளர் ஷெனால் பெர்ணாண்டோ இந்தக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தமக்கு நெருங்கியவர்களை பதவிகளில் அமர்த்தி இலங்கை மருத்துவ சபைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மருத்துவ சபை வைத்தியவர்களின் தரங்களை உறுதி செய்யும் அரச நிறுவனமாகும்.

எனினும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஐந்துப் பேரைக்கொண்ட அதிகாரசபையை அமைத்து இலங்கை மருத்துவ சபையின் பதிவு, சர்வதேச அங்கீகாரத்துக்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக ஷெனால் பெர்ணான்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே முன்னாள் அமைச்சின் நெருங்கியவர்களை இலங்கை மருத்துவ சபையில் இருந்து விலக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.