ரக்பி வீரர் வாசிமின் கொலையில் நீதிக்கான நம்பிக்கையை இழந்துவிட்டதாக குடும்பத்தினர் தெரிவிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

ரக்பி வீரர் வாசிம் தாஜூதீன் கொலை தொடர்பில் நீதிக்கான நம்பிக்கையை தாம் இழந்துவிட்டதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவருடைய உடலம் தோண்டியெடுக்கப்பட்டு புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஐந்து வருடங்கள் ஆகியுள்ளன.

இந்தநிலையில் வாசிமின் உடல் தோண்டியெடுக்கப்பட்டபோது தமது குடும்பத்தினரின் இதயங்கள் உடைந்துப்போனதாக வாசிமின் சகோதரரி பேஸ்புக் பதிவு ஒன்றை செய்துள்ளார்.

எனினும் அவருடைய மரணத்துக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே உடலத்தை தோண்டுவதற்கு தாம் அனுமதித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்

எனினும் நீதிக்கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்று அற்றுப்போயுள்ளதாக வாசமின் சகோதரியான ஆயிஸா தாஜூதீன் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு மே 12ஆம் திகதியன்று வாசிம் தாஜூதீன் தமது சிற்றூந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது கொல்லப்பட்டார்.

முன்னதாக அவரின் மரணம் விபத்தினால் ஏற்பட்டது என்று நம்பப்பட்டது. எனினும் தகவல்கள் வெளியானபோது அது கொலை என்பது தெரியவந்தது.

இந்தநிலையில் வாசிமின் கொலையில் நீதியை பெற்றுத்தருவதாக முன்னைய அரசாங்கம் உறுதியளித்திருந்த போதும் அது நிறைவேற்றப்படவில்லை.