சாய்ந்தமருது கடலில் கரையொதுங்கிய டொல்பின்

Report Print Kanmani in சமூகம்

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கடற்கரைப்பகுதியில் டொல்பின் மீன் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

கடற்கரையோர பகுதியில் மிதந்து இறந்த நிலையில் மிதந்து வந்த குறித்த மீன் இனம் இன்று கரையை அடைந்துள்ளதை அவதானிக்க முடிந்தது.

அதனை தொடர்ந்து உரிய அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வந்து குறித்த மீனை பார்வையிட்டதுடன் ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.

மேலும் அண்மைக்காலமாக அம்பாறை மாவட்ட கரையோரங்களில் அரிதான மீன் இனங்கள் உயிருடனும் இறந்த நிலையிலும் கடற்கரையில் வந்து அடைகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.