திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக வவுனியா நோக்கி சென்ற பேருந்து விபத்து

Report Print Theesan in சமூகம்

செட்டிகுளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இ.போ.சாலைக்கு சொந்தமான பேருந்தொன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த அனர்த்தம் இன்று காலை பூவரசன்குளம் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே பேருந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் நேரவில்லை என்ற போதும் வீதியோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.