வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவரொருவர் உயிரிழப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் முதியவரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்பகுதியில் நின்றிருந்த முதியவரை குறித்த பேருந்து மோதி தள்ளியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் முச்சக்கரவண்டியின் மூலம் கொண்டு செல்லப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பொகஸ்வெவ பகுதியை சேர்ந்த ஜெயலத் பேரிகே என்ற (77 வயது) நபரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.