இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 2881ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் எகிப்தில் இருந்து வந்த இந்திய கப்பல் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருந்து இந்த அதிகாரிக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகாதார அதிகாரிகளின் தகவல்படி 232 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுவரை 2638 பேர் தொற்றில் இருந்து குணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.