அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுவதாக கொழும்பு போட்சிட்டியின் உள்ளூர் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Report Print Ajith Ajith in சமூகம்

தாம் அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுவதாக கூறி கொழும்பு போட்சிட்டியின் உள்ளூர் பணியாளர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தியுள்ளனர்.

பெருமளவு உள்ளூர் பணியாளர்கள் போட்சிட்டி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், சீனப் பணியாளர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படும் அதேநேரம் இலங்கையின் பணியாளர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் நடத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தொழில் திணைக்கள அதிகாரிகள் நேற்று தம்மை வந்து சந்தித்தபோதும் தீர்வுகளை தரவில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்களான உள்ளூர் பணியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை சீனா, இலங்கையின் தொழில் சட்டங்களை நிராகரிப்பதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை பிரச்சினைகளை தீர்க்காது இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நடத்துவது சிறந்ததல்ல என்றும் போட்சிட்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமது நிர்வாகம் கொரோனாவுக்கு பின்னரும் சுமார் 1500 இலங்கை பணியாளர்கள் போட் சிட்டிக்குள் தொழில் செய்வதாகவும் போட்சிட்டி குறிப்பிட்டுள்ளது.