ஸ்ரீலங்கன் விமானத்தில் சீனா சென்ற 23 பேருக்கு கொரோனா - 4 வாரங்களுக்கு விமானங்கள் இரத்து

Report Print Tamilini in சமூகம்

இலங்கையில் இருந்து சீனாவின் ஷெங்காய் நகரத்திற்கு செல்லும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானங்கள் 4 வாரங்களுக்கு இரத்து செய்வதற்கு அந்த நாட்டு சிவில் விமான சேவை அதிகார சபை தீர்மானித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி சீனாவின் ஷெங்காய் நகரிற்கு சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் 23 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக விமான சேவைகள் இரண்டின் விமான பயணங்களை இரத்து செய்வதற்கு அந்த நாட்டு சிவில் விமான சேவை கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

அபுதாபுயில் இருந்து Etihad விமான சேவை, பீலிப்பைன்ஸ் மெனிலா நகரத்தில் இருந்து சைனா ஈஸ்டர்ன் விமான சேவை விமானங்களை ஒரு வாரத்திற்கு நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.