மாலைதீவில் சிக்கியிருந்த 179 இலங்கையர் நாடு திரும்பினர்

Report Print Rakesh in சமூகம்

மாலைதீவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 179 பேர் இன்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் UL 102 எனும் விசேட விமானத்தில், இவ்விமான பயணிகள் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்விமான பயணிகளில் பெரும்பாலானோர், மாலைதீவில் சுற்றுலாத் துறையில் பணியாற்றியவர்களாவர்.

இவ்வாறு வருகை தந்த விமான பயணிகள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.