சீசெல்ஸ் நாட்டில் 7 இலங்கையர்கள் விளக்கமறியலில்

Report Print Ajith Ajith in சமூகம்

சீசெல்ஸ் நாட்டின் கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக 7 இலங்கையர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஜூலை 16ஆம் திகதி அன்று பல தொன்கள் சுறா மீன்கள் சகிதம் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் ஆகஸ்ட் 5ஆம் திகதி சீசெல்ஸ் மேல்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை இந்த மீன்பிடி படகு ஆகாய வழியாக கண்காணிக்கப்பட்ட பின்னர் அதனை கைப்பற்றுவதற்காக சுமார் 4 லட்சம் ரூபா செலவிடப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.