சமூகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி - ஆசிரியர்கள் உட்பட 100 பேர் தனிமைப்படுத்தல்

Report Print Vethu Vethu in சமூகம்

அனுராதபுரம், ராஜாங்கன யாய 5 பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

இதன் காரணமாக பாடசாலை ஆசிரியர்கள் உட்பட 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வட மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ராஜாங்கன யாய 5 நவோத்யா வித்தியாலயத்தில் 11ஆம் வகுதிப்பில் கற்கும் 16 வயதுடைய மாணவனுக்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அந்த பிரதேசத்தில் முதல் முறையாக கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் வீட்டிற்கு முன்னால் இந்த மாணவன் வசித்து வருகின்றார்.

இந்நிலையிலேயே கொரோனா இவ்வாறு ஆசிரியர்கள் உட்பட 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


you may like this video,