இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை உயர்வு

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் நேற்று மாத்திரம் 2ஆயிரத்து 732 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனையடுத்து இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1லட்சத்து 82ஆயிரத்து 681ஆக உயர்ந்துள்ளது.

தரவுகளின் படி ஆகஸ்ட் 11ஆம் திகதியன்று ஒரேநாளில் ஆகக்கூடிய பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அன்றைய தினம் 2909 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை தொற்றுநோய் தடுப்புப்பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை இன்று 4 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.இவர்களில் மூன்று பேர் ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்தும் ஒருவர் ஜப்பானில் இருந்தும் வந்தவர்களாவர்.

இதனையடுத்து நாட்டின் மொத்த தொற்றாளிகளின் எண்ணிக்கை 2886ஆக உயர்ந்துள்ளது.

213 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் . இதுவரை 2658 பேர் தொற்றில் இருந்து விடுதலைப்பெற்றுள்ளனர்.

கொரோனா சந்தேகத்தில் 55 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.