ராஜாங்கனை பகுதியில் 50 மாணவர்கள் உள்ளிட்ட 96 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Report Print Ajith Ajith in சமூகம்

பொலன்னறுவை ராஜாங்கனையில் 50 மாணவர்கள், 6 ஆசிரியர்கள் உட்பட்ட 96 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

16 அகவையைக்கொண்ட மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமையை அடுத்தே இந்த 96 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ராஜாங்கனை பிரதேசத்தில் 102 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின்போதே குறித்த மாணவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பபட்டது.