இலங்கையில் 2 வாரங்களில் 220 கோடி ரூபா பரிமாற்றம் செய்த நபர்கள்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

கடந்த இரண்டு வார காலப்பகுதியில் சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகம் மூலம் 220 கோடி ரூபா பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பணம் சட்டவிரோதமான பறிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸ் பேச்சாளார் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

போதை பொருள் வர்த்தகம் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட பணம் பறிமாறும் முறை, அவற்றறினை பயன்படுத்தி வெளிநாடுகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும் நிதி சலவை திட்டத்தின் கீழ் அரசுடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக பாரிய சட்டவிரோத போதைப் பொருள் களஞ்சியறைகள் 8 சுற்றிவளைக்கப்பட்டன. அங்கு பெற்றுக் கொள்ளப்பட்ட பொருட்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


you may like this video,