வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 154 பேர் விடுவிப்பு

Report Print Theesan in சமூகம்

டுபாயிலிருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா - பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 154 பேர் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 நோய்தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் கடந்த முதலாம் திகதி டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பயணிகள் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த நிலையில், 1154 பேர் அவர்களது சொந்த இடங்களான கம்பஹா, கொழும்பு, கண்டி, கேகாலை, திருகோணமலை, களுத்துறை போன்ற பகுதிகளிற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பயணிகளிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.