நாட்டு மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்
474Shares

இலங்கையில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தபடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பாவனையாளர்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

24 மணிநேர நீர்விநியோகத்தில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம். அத்துடன் நீர் குறைந்த அழுத்தத்துடன் விநியோகிக்கப்படும் என்று சபை அறிவித்துள்ளது.

அத்துடன் அவசர நிலைமைகளில் 1939 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்களை நீர்விநியோக வடிகால் அமைப்புச் சபை கோரியுள்ளது.