இரண்டு வயது மகளுடன் கஞ்சா விற்ற இளம் தம்பதி கைது

Report Print Steephen Steephen in சமூகம்
157Shares

இரண்டு வயதான தமது மகளையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கணவன், மனைவியை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவினர் இவர்களை கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக நபர்களை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

அப்போது தம்வசம் வைத்திருந்த கஞ்சாவில் ஒரு பகுதியை சந்தேக நபர்களில் ஒருவரான பெண் விழுங்கியுள்ளார்.

எனினும் சுமார் 10 கிராம் கஞ்சாவுடன் அவர்கள் கைது செய்யப்பட்டதுடன், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 25 மற்றும் 30 வயததான இளம் தம்பதியர் எனவும் பொலிஸார் கூறியுள்ளார். இவர்கள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.