முல்லைத்தீவு பகுதியில் காருடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

Report Print Thileepan Thileepan in சமூகம்
338Shares

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வீடு ஒன்றிக்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு தீ வைத்தமை தொடர்பில் காருடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் இன்றைய தினம் முல்லைத்தீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிப்படுத்தலில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் கார் ஒன்றுடன் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.