சர்வதேச காவல்துறையான இன்டர்போலினால் தேடப்படும் 14 குற்றவாளிகளுக்கான சிவப்பு அறிவித்தல்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக இலங்கையின் குற்றப்புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த 14 பேரும் வெளிநாடுகளில் மறைந்துள்ள நிலையில் தேடப்பட்டு வருவதாக சிரேஷ்ட காவல்துறை அதிபரான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இவர்கள் கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பிலேயே தேடப்படுவதாக ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்து நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தும் வகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.