வவுனியாவில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தேடிச் சென்ற மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர்

Report Print Thileepan Thileepan in சமூகம்
64Shares

வவுனியாவில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் தேடிச் சென்று சந்தித்துள்ளார்.

கடும் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையினால் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கணேசபுரம் , சமயபுரம் பகுதிகளை சேர்ந்த 55 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் பாதிப்படைந்துள்ளனர்

இந் நிலையில் அவர்களின் நிலமைகளை இன்று அரசியல்வாதிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் பாதிப்படைந்த வீடுகளை பார்வையிட்டதுடன் அந்த மக்களுடனும் கலந்துரையாடியுள்ளனர்.

சேதமடைந்த வீடுகளை புனரமைப்பு செய்வதற்காக மதிப்பீடுகளை வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் அப்பகுதி கிராம சேவையாளரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.