அம்பாறையில் பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

Report Print Mubarak in சமூகம்
101Shares

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இன்று பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இந்நியமனங்கள் நாடளாவிய ரீதியாக வழங்கப்பட்டு வருவதுடன், இதன் பிரகாரம் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 256 பட்டதாரிகளுக்கு இன்று சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் நியமனக்கடிதங்களை வழங்கி பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இன்று வருகை தராத பெயர்ப்பட்டியலிலுள்ள ஏனைய பட்டதாரிகள் தாமதியாது பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து நியமனக்கடிதங்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக் , சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் எம்.எம் ஹுசைனா, என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள 20 பிரதேச செயலக பிரிவிகளிலும் 2119 பட்டதாரிகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.