இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள கொரோனா நோயாளிகள்! மூன்று நாட்களில் 97 பேருக்கு தொற்று

Report Print Murali Murali in சமூகம்
649Shares

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3092 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனா தொற்றுடன் மொத்தமான 43 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 26 பேர், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மூவர், குவைத்தில் இருந்து நாடு திரும்பிய ஆறு பேர், மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய ஆறு பேர், ஐக்கிய அரபு இராஜியத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவர், இலங்கை வந்துள்ள இந்திய கடலோடி ஒருவருக்கு என 43 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 11 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் பூரணமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2879 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 201 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த மூன்று நாட்களில் ( ஞாயிறு - 17, திங்கள் - 37, செவ்வாய் - 43) இலங்கையில் சுமார் 97 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,