தமிழகத்துக்குள் இலங்கையை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளதாக இரகசிய தகவல்!

Report Print Ashik in சமூகம்

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகத்துக்குள் இலங்கையை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளதாக ராமேஸ்வரம் மெரைன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தனுஸ்கோடி கடற்கரை ஓரத்தில் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது கம்பி பாடு கடற்கரையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை கைது செய்து விசாரணை செய்துள்ளனர்.

குறித்த நபர் இலங்கையின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் பண்டாரநாயக்க வயது (30) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர் சிங்களம் மொழியில் பேசுவதனால் இவர் குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.