சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட 18 நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட 18 நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்குகள் நேற்றிரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை பதிவுசெய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றிச்சென்ற சந்தேகத்தின் பெயரில் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கோமரங்கடவல - கல்கடவல பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பக்மீகம மற்றும் அடம்பன பகுதிகளில் கஞ்சா போதைப்பொருள் மற்றும் கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 17 நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் சந்தேகநபர்கள் மீது முன் குற்றங்கள் ஏதாவது பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றிய விபரங்களை திரட்டிவருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.