இனநல்லுறவை வலியுறுத்தி நடைபயணம்

Report Print Theesan in சமூகம்

இலங்கையில் இன நல்லுறவையும், சமூகங்களிற்கிடையில் ஒற்றுமையையும் வலியுறுத்தி நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காலியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடைபயணம் யாழ்ப்பாணத்தை சென்றடைந்து மீண்டும் அங்கிருந்து காலி நோக்கி குறித்த நடைபயணம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காலியை சேர்ந்த சுப்பிரமணியம் பாலகுமார என்ற 40 வயதுடைய நபரே குறித்த நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கடந்தவாரம் யாழ்ப்பாணத்தை சென்றடைந்த அவரது பயணம் அங்கிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு இன்று காலை வவுனியாவை வந்தடைந்தது.