திடீர் சுற்றி வளைப்பு! மேல் மாகாணத்தில் 417 பேர் கைது

Report Print Rakesh in சமூகம்

கொழும்பு , கம்பஹா உட்பட மேல் மாகாணத்தில் பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 417 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையில் இந்தச் சுற்றி வளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச் செயல்கள் தொடர்பாக 172 பேரும் , நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த மற்றும் வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 245 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.