முதிரை மரக்குற்றிகளுடன் இரண்டு வாகனங்கள் மீட்பு! சாரதிகள் தப்பியோட்டம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலமோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்தி செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பூவரசங்குளம் விசேட அதிரடிபடையினர் மீட்டுள்ளனர்.

பாலமோட்டை பகுதியில் முதிரை மரங்கள் கடத்தப்படவுள்ளதாக பூவரசங்குளம் விசேட அதிரடிப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இன்று அதிகாலை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற இரண்டு வாகனங்களும் வழிமறிக்கப்பட்டுள்ளன.

எனினும் வாகனங்களை நிறுத்தாமல் சென்றதால் துரத்தி சென்று மடக்கி பிடித்துள்ளனர். இதனால் குறித்த வாகனங்களை செலுத்தி சென்ற சாரதிகள் வாகனங்களை வீதியில் நிறுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 18 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றை கடத்திச் செல்ல பயன்பட்ட இரண்டு கப் ரகவாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட முதிரை குற்றிகளை வனவளத்திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.