குளத்தில் நீராடச் சென்ற சிறுமி மரணம்! வாகரையில் சம்பவம்

Report Print Navoj in சமூகம்

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்ற கிராமமான குகனேசபுரம் கிராமத்தில் குளத்தில் நீராடச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்த சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்ற கிராமமான குகனேசபுரம் காலிகோவில் வீதி 06ம் குறுக்கை சேர்ந்த சன்முகநாதன் விஜய ரூகினியும், அவரது சகோதரியும் இன்று மாலை ஆலம்குளத்திற்கு குளிக்கச்சென்றபோதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமடைந்த சிறுமி சன்முகநாதன் விஜய ரூகினி (வயது 12) ஆலம்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 06ல் கல்வி பயின்ற மாணவி என்பதுடன் மூன்று பேர் உள்ள குடும்பத்தில் இச் சிறுமி மூன்றாவது பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கது.