சொத்துப் பிரச்சினையால் வயோதிப தாயை தாக்கிய மகள்! திருகோணமலையில் சம்பவம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலையில் காணி பிரச்சினை காரணமாக தனது 70 வயதுடைய தாயை மகள் ஒருவர் தாக்கிய சம்பவம் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

திருமணம் முடித்து தற்போது தோப்பூர் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் குறித்த பெண் தனது தாயிடம் சொத்து கேட்டுச் சென்ற நிலையிலேயே வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.

70 வயதான அந்தப் பெண்ணின் தாயார் தாக்கப்பட்ட நிலையில் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஈச்சிலம்பற்று, பூநகர் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய புவனேஸ்வரி என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தாயார் தன்னை தாக்கியதாக தெரிவித்து மகளும் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இரண்டு முறைப்பாடுகள் தொடர்பிலும் தாம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.