கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் காதலர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் வைத்து இன்று காலை சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கடந்த 4ம் திகதி முதல் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த 28 வயதான சுசிதரன் மற்றும் 27 வயதான தனுஷியா ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த ஆண் யாழ்ப்பாணம் மின்சார சபையில் பணியாற்றி வந்த நிலையில், குறித்த பெண் கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றியுள்ளார்.

தனுஷியாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பிரதேச செயலகத்தில் வேலை கிடைத்தாக தெரிய வருகிறது.

சடலமாக மீட்கப்பட்ட யுவதி கடந்த சில நாட்களுக்கு முன் பட்டதாரி நியமனம் பெற்ற யுவதியாகும்,இளைஞர் இலங்கை மின்சார சபையில் ஒப்பந்தப் பணியில் ஈடுப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.